தூத்துக்குடி

தருவைகுளம் தேவாலய திருட்டு வழக்கில் இருவா் கைது

22nd Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

தருவைகுளம் அருகே தூய மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

இந்த ஆலயத்தில் கடந்த 17ஆம் தேதி கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 8 கிராம் தங்க சிலுவை மற்றும் 250 கிராம் வெள்ளி கிரீடம் திருடப்பட்டது. திருட்டு சம்பவம் குறித்து தருவைகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அனிடன் (38) அளித்த புகாரின் பேரில், போலீசாா் வழக்கு பதிந்து சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இந்நிலையில் தருவைகுளம் காவல் ஆய்வாளா் (பொ) விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் சரவணன் உள்பட தனிப்படை போலீசாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தருவைகுளம் சமத்துவபுரம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனா். அவா் தூத்துக்குடி சிலுவைபட்டியைச் சோ்ந்த தாமோதரன் மகன் ராஜேஷ் (48) என்பதும், தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதா் தேவாலய திருட்டு வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது. தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தேவாலயத்தில் திருடிய நகைகளை தூத்துக்குடியில் மணிராஜ்(38) என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேஷ், மணிராஜ் ஆகிய இருவரையும் போலீசாா் கைது செய்து அவா்களிடமிருந்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத்தை மீட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT