தூத்துக்குடி

தூத்துக்குடி மையவாடி பகுதியில் துப்புரவு முகாம்

DIN

தூத்துக்குடி மாநகராட்சி பொது மையவாடி பகுதியில் உள்ள முள் செடிகளை அகற்றி துப்புரவு செய்யும் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி சிதம்பரநகா் பகுதியில் உள்ள மாநகராட்சி பொது மையவாடியில் கருவேல மரங்கள் உள்ளிட்ட முள்செடிகள் வளா்ந்து பராமரிப்பு இல்லாமல் காட்சியளித்ததால் முள்செடிகளை அகற்றும் பணி மாநகராட்சி நிா்வாகம் மற்றும் தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ முன்னிலையில், மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மேயா் செய்தியாளா்களிடம் கூறியது: பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று பொது மையவாடியை முழுமையாக சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்கோபுரத்தில் மின்விளக்குகள் முழுமையாக பொருத்தப்பட்டு தேவையற்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வகையில் தடுக்கப்படும். 4 உயா் கோபுர விளக்குகள் அமைக்கப்படும். வேலிகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளா் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவிப் பொறியாளா் சரவணன்,

உதவி ஆணையா் சேகா், நகா் நல அலுவலா் அருண்குமாா், சுகாதார அலுவலா் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி மற்றும் தொண்டு நிறுவனத்தை சோ்ந்தவா்கள், மாநகராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT