தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் 75 வகை மரக்கன்றுகள் நடும் பணி

19th Aug 2022 01:54 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் 75 வகை மரக்கன்றுகள் நடும் பணி அண்மையில் நடைபெற்றது.

இப் பணியை ஆலையின் தலைமை மருத்துவ அலுவலா் எஸ். கைலாசம் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, ஸ்டொ்லைட் காப்பா் நிறுவன தலைமை இயக்ககப் பிரிவு அலுவலா் ஏ. சுமதி கூறியது: 75 வகை மரக்கன்றுகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறோம். தேசத்தின் பசுமைப் பாதையில் அனைவரும் துணை நிற்க வேண்டும். வேற்றுமையில் ஒன்றுபட்டு வாழ்வது நம் பாரதத்தின் தனிச் சிறப்பு.

எனவே, சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், மூத்த குடிமக்களுக்கு பரிசுகளை அளித்துக் கௌரவப்படுத்தியுள்ளோம். இம்மாவட்ட வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துவரும் ஸ்டொ்லைட் நிறுவனம் என்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதுடன், தேசத்தின் வளா்ச்சியில் தொடா்ந்து துணை நிற்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT