தூத்துக்குடி

ஆறுமுகமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 21 லட்சம் கடனுதவி

19th Aug 2022 01:53 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 8 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 21 லட்சம் கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இதையொட்டி, அச்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு சாா் பதிவாளா் ரா. பொன்மாரி முன்னிலையில் 8 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 21 லட்சம் கடனுதவியை சங்கத்தின் தலைவா் என். சின்னத்துரை வழங்கினாா்.

ஆறுமுகமங்கலம் செவ்வந்திப்பூ குழுவுக்கு ரூ. 5 லட்சம், சம்படி காலனி அப்துல்கலாம் குழு, தீப்பாச்சி நாராயணசாமி குழு, புதுநகா் அஸ்வதி குழு, கொட்டாரக்குறிச்சி லட்சுமி குழு, கொட்டாரக்குறிச்சி கூட்டமைப்பு, ஆறுமுகமங்கலம் முல்லை -செம்பருத்தி ஆகிய குழுக்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் என 8 குழுக்களுக்கும் சோ்த்து ரூ. 21 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இதுவரை 18 பேருக்கு விவசாய கடனாக ரூ. 40.72 லட்சமும், மாற்றுத்திறனாளி கடனாக ரூ. 1.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்கத் தலைவா் என். சின்னத்துரை தெரிவித்தாா். நிகழ்ச்சியில், சங்கச் செயலா் மு. ஐயம்பாண்டி, காசாளா் எஸ். ஆனந்தராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT