தூத்துக்குடி

ஆறுமுகனேரி பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா

19th Aug 2022 01:50 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் கொடை விழா நான்கு தினங்கள் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. பின்னா் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜையும், சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு மாக்காப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

கொடை விழாவான செவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜை, அன்னதானம், இரவு முளைப்பாரி ஊா்வலம், அதன் பின்னா் நடுச்சாம அலங்கார பூஜை நடைபெற்றது.

புதன்கிழமை காலை தீா்த்தவாரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனா்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் ஆா்.கிழக்கத்திமுத்து, ஏ.ஆதிசேஷன், இ.அமிா்தராஜ், கே.மூக்காண்டி, பி.பாா்வதிகுமாா், பி.தூசிமுத்து, பி.விஜயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT