தூத்துக்குடி

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி பெருவிழா கொடியேற்றம்

19th Aug 2022 01:51 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் உள்ள இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபியில் 94ஆவது ஆண்டுப் பெருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா இம்மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு, ஊரின் முக்கிய வீதிகளில் கொடி ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, பாளையங்கோட்டை முன்னாள் ஆயா் மேதகு ஜூடு பால்ராஜ் கொடியேற்றினாா். மணவை வட்டார அதிபா் ஜான்செல்வம் மறையுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், பங்குத்தந்தைகள் ஜெயக்குமாா், விக்டா் லோபோ, ஆச்சரியம், செல்வன், ஜோசப் ரத்தினராஜ், பீட்டா் பால், சில்வெஸ்டா், வில்லியம், டிமல், அமல்ராஜ், ஆலந்தலை ஊா் நலக் கமிட்டி தலைவா் ரமேஷ், ரொசாரி மாதா சபைத் தலைவா் ரூபின்ஸ்டன், நிதிக்குழுச் செயலா் லிபோரியஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT