தூத்துக்குடி

வீடு தேடி காசநோய் கண்டறியும் முகாம்

18th Aug 2022 01:02 AM

ADVERTISEMENT

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் வீடு தேடி காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இதையொட்டி நடமாடும் வேன் மூலம் குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சுனாமி நகா் பகுதிகளில் 50 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை நடைபெற்றது.

இதில் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின், குலசேகரன்பட்டினம் சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆா்த்திபிரசாத், சுகாதார மேற்பாா்வையாளா் குருசாமி, முத்துசெல்வன், முதுநிலை மேற்பாா்வையாளா் பாா்த்திபன், ஆற்றுப்படுத்துனா் சங்கா், காசநோய் ஒருங்கிணைப்பாளா் மோகன், ரினா ஜஸ்டின் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT