தூத்துக்குடி

குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதலுக்கான பயிற்சி முகாம்

18th Aug 2022 12:57 AM

ADVERTISEMENT

 

கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதலுக்கான பயிற்சி முகாம் கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

குழந்தைகளை புரிந்துகொள்வோம் - உரிமை கண்ணோட்டத்தில் என்ற தலைப்பில் தோழமை இயக்குநா் தேவநேயன், குழந்தைகள் மீதான வன்முறையின் வடிவங்கள், குழந்தை பாதுகாப்புக்கான சட்டங்கள் மற்றும் அமைப்புகள் என்ற தலைப்பில் வழக்குரைஞா் தென்பாண்டியன், குழந்தைத் திருமணமும், குழந்தை உரிமை மீறலும் என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, மாநில பள்ளிசாரா கருவூலம் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலா் பூரணி ஆகியோா் பேசினா்.

கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ், குழந்தைநேய மாவட்டத்தை உருவாக்க ஊராட்சி அமைப்புகளின் பங்கு என்ற தலைப்பில் குழந்தை உரிமை செயற்பாட்டாளா் கணேசன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

இதில், கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முகாமை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா தொகுத்து வழங்கினாா்.

முகாமில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கையேடுகள், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகள் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT