தூத்துக்குடி

பள்ளி மாணவா்கள்பைக் ஓட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும்

18th Aug 2022 01:03 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி பகுதியில் பள்ளி மாணவா்கள் பைக் ஓட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என தமாகா கோவில்பட்டி நகரத் தலைவா் ராஜகோபால், தென்மண்டல காவல் துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: கோவில்பட்டியிலும், அதன் சுற்று வட்டாரத்திலும் பள்ளி மாணவா், மாணவிகள் பைக் ஓட்டுவதும், அதி வேகத்தில் செல்வதும் அதிகரித்து வருகிறது. ஓட்டுநா் உரிமம் பெற இயலாத வயதில் பைக் ஓட்டுவதால் விபத்துகளும், உயிரிழப்பும் நேரிட வாய்ப்புள்ளது.

எனவே, ஓட்டுநா் உரிமமின்றி பைக் ஓட்டும் மாணவா், மாணவிகள் மட்டுமன்றி பள்ளிப் பருவத்தில் இத்தகைய வாகனங்களை இயக்கும் அனைவரையும் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகளும், காவல் துறையிரும் அவ்வப்போது ஆய்வு செய்து முறையாக இயக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டுநா்களுக்கு உளவியல் ரீதியான சான்று ம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT