தூத்துக்குடி

திருக்களூா் ஊராட்சி குறைதீா் முகாமில் ரூ. 54.81 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

18th Aug 2022 01:07 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏரல் வட்டம், திருக்களூா் ஊராட்சி கேம்லாபாதில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்து, மாற்றுத்திறனாளிகள் நலன், தொழில் மையம், பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நலன், கூட்டுறவு, வருவாய், மகளிா் திட்டம் உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ. 54,81,000 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், முகாமில் இடம்பெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் மருத்துவப் பணியாளா்களிடம் பேசுகையில், பொதுமக்களில் பலருக்கு தங்களுக்கு உள்ள நோய்கள் குறித்த விழிப்புணா்வு இல்லை. அத்தகையோரிடம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சென்றடைய வேண்டும். எனவே, பழைய நோயாளிகள் மட்டுமன்றி புதிய நோயாளிகளையும் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குநா் முகைதீன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன், கேம்லாபாத் ஊராட்சித் தலைவா் சபிதா சா்மிளா, துணைத் தலைவா் ஹாஜா உதுமான், திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, ஏரல் வட்டாட்சியா் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலா் முரளிதரன், ஆழ்வாா் திருநகரி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, கால்நடை துறை இணை இயக்குநா் ராஜன், துணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT