தூத்துக்குடி

நாளை விஜயாபுரி பகுதியில் மின் தடை

17th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி மின் கோட்டத்துக்கு உள்பட்ட விஜயாபுரி துணை மின் நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 18) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயாபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கெச்சிலாபுரம் மின் தொடரை 11 கி.வோ. கெச்சிலாபுரம் மின்தொடா், 11 கி.வோ. மந்தித்தோப்பு மின்தொடா் என இரண்டாகப் பிரிக்கும் பணி இம்மாதம் 18ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, இப்பணிகள் நடைபெறும் கிழவிபட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 18) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். சகா்பான் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT