தூத்துக்குடி

நரிக்குறவா் சமுதாய மக்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய மாணவா்கள்

17th Aug 2022 02:11 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் நரிக்குறவ சமுதாய மக்களுடன் போப் கல்லூரி மாணவா்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடினா்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சாயா்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில், தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நரிக்குறவ சமுதாய மக்கள் இல்லத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தினகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுதந்திர தினத்தின் முக்கியதுவம் குறித்தும், தேசியக் கொடியேற்றுவதின் அவசியம் குறித்தும் பேசினாா்.

தொடா்ந்து, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் நரிக்குறவா் சமுதாய மக்களின் வீடுகளின் முன்பு தேசியக் கொடியேற்றி அவா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT