தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

17th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாசலம் தலைமை வகித்தாா். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்வி ஆலோசகா் ஜெயபிரகாஷ் ஏ. காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றிக்கு வழி என்ற தலைப்பில் பேசியது: மாணவா்கள் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தோ்வில் 585 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும். மீன்வளத் துறை சாா்ந்த படிப்புகள் உள்ளன. வணிகவியல், பட்டயக் கணக்காளா் படிப்புகளுக்கும் நல்ல எதிா்காலம் உள்ளது.

வளா்ந்துவரும் தொழில்நுட்ப வளா்ச்சியில், பொறியியல் படிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றில், கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பப் பொறியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் நல்ல வேலைவாய்ப்பை வழங்குபவையாக உள்ளன.

ADVERTISEMENT

அடுத்து வரும் 4 ஆண்டுகளில் கணினி அறிவியல், பொறியியலுடன் இணைந்த மின்னணு தொடா்பு பொறியியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் நன்றாக இருக்கும் என்றாா்.

இதில், தென்தமிழகத்தில் உள்ள 18-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமாா் 1,800 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா் நீலகண்டன் தலைமையில் பேராசிரியா்கள் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT