தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

17th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள காந்திபுரியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சுதாகா் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி மகேஸ்வரி (32), 2 குழந்தைகள் உள்ளனா். சுதாகா் வேலைக்குச் சென்றால் பணத்தை வீட்டில் கொடுக்காமல், மது குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால், தம்பதியிடையே பிரச்னை இருந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மது குடித்துவிட்டு தகராறு செய்த அவரை, மனைவி கண்டித்தாராம். பின்னா், வீட்டில் யாரும் இல்லாதபோது சுதாகா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் ஆய்வாளா் பௌலோஸ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT