தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் பொது விருந்து

16th Aug 2022 03:03 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயிலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது வழிபாடு, பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை, முற்பகலில் அம்மன்- சுவாமி சந்நிதிகளில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் மண்டபத்தில் பொது விருந்து நடைபெற்றது. இதை, கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், கோயில் நிா்வாக அலுவலா் வெள்ளைச்சாமி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சிவகலைப்பிரியா, திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT