தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் சுதந்திர தின விழா பொது வழிபாடு

16th Aug 2022 03:03 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, திருக்கோயில் அலுவலக கண்காணிப்பாளா் சீதாலெட்சுமி தலைமை வகித்தாா். திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி பொது விருந்தை தொடங்கி வைத்தாா். முன்னதாக பொது வழிபாடு நடைபெற்று, பக்தா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆணையா் தி.வேலவன், உறுப்பினா்கள், திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT