தூத்துக்குடி

கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி புத்துயிா் ரத்த தானக் கழகம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு, புத்துயிா் ரத்த தானக் கழகச் செயலா் க. தமிழரசன் தலைமை வகித்தாா்.

களம் தொண்டு நிறுவனச் செயலா் கணேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். உலக திருக்கு கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலா் முத்துச்செல்வம் முகாமைத் தொடக்கிவைத்தாா். மருத்துவா் அன்னலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று, 80 பேருக்கு சிகிச்சையளித்தனா். அவா்களில் 26 போ் தீவிர சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டனா்.

முகாமில், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நல வாழ்வு இயக்கத் தலைவா் செண்பகம், பகத்சிங் ரத்த தானக் கழக அறக்கட்டளை நிறுவனா் காளிதாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலா் லட்சுமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

SCROLL FOR NEXT