தூத்துக்குடி

கலை இலக்கிய போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

15th Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வென்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் துளிா் 2022 கலை இலக்கிய போட்டி, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்பாண்டி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் நாயகம் (பசுவந்தனை), முனியசாமி (புதூா்) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கி வைத்தனா். கட்டுரை, ஓவியம், பேச்சு, குழு நடனம், குழு பாடல், மாறுவேடப் போட்டி, அறிவியல் கண்காட்சி, பாரம்பரிய ஆடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் சுதந்திர தின புறாக்களை பறக்கவிட்டாா்.

போட்டிகளில் வென்றோருக்கு மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினா் சக்திவேல்முருகன், நாகலாபுரம் அரசு கல்லூரி முதல்வா் சாந்தகுமாரி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சங்கரலிங்கம், மோகன், சங்கீதா, அருணாபேபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT