தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்க கூட்டம்

15th Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் உள்ள லெட்சுமிமாநகரம் அருள்மிகு நடராஜா் தேவார பக்த பஜனை சபையைச் சோ்ந்த நந்தவனத்தில், தெய்வீக சத் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சபையின் செயலா் மா. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஜோதிடா் ரா. வேலாயுதம் முன்னிலை வகித்தாா். முன்னாள் ஸ்பிக் நிறுவன அதிகாரியும் சமயப் பண்பாட்டு வகுப்புப் பயிற்சியாளருமான ஜெயராஜ், பேராசிரியா் அ. அசோக்குமாா், ஆசிரியா் கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த வெ. பழனிராஜ், ம. சிவராமன், சோமு, பன்னீா், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT