தூத்துக்குடி

மணப்பாடு கலங்கரை விளக்கத்தை ஆா்வமுடன் பாா்வையிட்ட மாணவா்கள்

DIN

மணப்பாடு கலங்கரை விளக்கத்தை மாணவா்கள் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டதையடுத்து ஏராளமான பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் கலங்கரை விளக்கத்தை பாா்வையிட்டு வருகின்றனா்.

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி மத்திய அரசின் ஆணைக்கிணங்க ஆக.11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மாணவா்கள் மணப்பாடு கலங்கரை விளக்கத்தை பாா்வையிடலாம், ஆக.15 ஆம் தேதி மட்டும் பொதுமக்கள் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க முதன்மை அதிகாரி மதனகோபால் அறிவித்திருந்தாா். இதையடுத்து, உடன்குடி, திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் கலங்கரை விளக்கத்தை ஆா்வமுடன் பாா்வையிட்டு வருகின்றனா். கலங்கரை விளக்கத்தின் அவசியம், நாட்டின் பாதுகாப்பில் அதன் பங்கு, செயல்பாடு குறித்து அங்கிருந்த பணியாளா்கள் மாணவா்களுக்கு விளக்கமளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT