தூத்துக்குடி

தூத்துக்குடியிலிருந்து சென்னை, கோவைக்கு சிறப்பு ரயில் இயக்க வலியுறுத்தல்

DIN

தூத்துக்குடியிலிருந்து சென்னை, கோவைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் செயலா் மா. பிரம்மநாயகம், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பிய மனு: கரோனா பரவலுக்கு முன்பு தூத்துக்குடி- கோவை பிணைப்பு ரயில், தூத்துக்குடி- சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இயக்கப்படவில்லை. எனவே, பயணிகளின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடி- கோவை இடையே இரவு நேர சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும்.

மேலும், தூத்துக்குடி- சென்னை இடையே நாள்தோறும் பகல் நேர சிறப்பு ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி- சென்னை இடையே வாரம் 3 நாள்கள் இரவு நேர சிறப்பு ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலி- பாலக்காடு இடையே இயக்கப்பட்டுவரும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மதுரை- லோக்மான்யா திலக் வாராந்திர ரயிலை தூத்துக்குடிவரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT