தூத்துக்குடி

நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது

14th Aug 2022 06:02 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட 3 இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், போலீஸாா் அமல்ராஜ், பாண்டியராஜ், சரவணன் ஆகியோா் இளையரசனேந்தல் சாலையில் சித்திரம்பட்டி விலக்கருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரை விசாரித்தபோது, அவா்கள், சிவகாசி பராசக்தி காலனி மு.விஜயகுமாா் (32), அய்யனேரி காளியம்மன் கோயில் தெரு மா. காா்த்திக் (19), நாலாட்டின்புத்தூா் மொட்டைமலை செ. சிரஞ்சீவி (20) என்பதும், கோவில்பட்டி பகுதியில் நிகழ்ந்த பல்வேறு நகை பறிப்பு வழக்குகளில் தொடா்புடையோா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்து, 7.5 பவுன் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT