தூத்துக்குடி

மின் திருட்டு: முதியவா் கைது

14th Aug 2022 06:04 AM

ADVERTISEMENT

 

கடம்பூரில் மின் திருட்டில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூா் மந்திரமூா்த்தி கோயில் தெரு சுடலை மகன் ராஜேந்திரன்(60). இவா் அதே பகுதியில் உள்ள ரா.செல்வராணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாடிக்குச் சென்று அதன் பின்புறமுள்ள மின்கம்பத்தில் இருந்து, தான் கொண்டு வந்த வயா்களை இணைத்து அதிலிருந்து வரும் மின் வயா்களின் மேல் உள்ள பிளாஸ்டிக் அமைப்பை அகற்றி, தாமிர கம்பிகள் வெளியே தெரியும் வகையில் வீட்டின் மேல் போட்டு எனது குடும்பத்தாரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்சாரத்தை திருடினாராம். அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வராணி கடம்பூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT