தூத்துக்குடி

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 4579 வழக்குகளுக்கு தீா்வு

14th Aug 2022 06:02 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் போது 4579 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். குருமூா்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகளும், கோவில்பட்டியில் 2 அமா்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமா்வுகளும், திருச்செந்தூா், விளாத்திகுளம், மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகளில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

ADVERTISEMENT

வங்கி வாராக்கடன் வழக்குகளில் 431 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 190 வழக்குகள் தீா்வு காணப்பட்டது.

இதன் மூலம் ரூ. 4,95,20,349 தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 4693 வழக்குகளில்

ரூ. 6, 69, 69, 119.85 மதிப்புள்ள 4389 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மொத்தம் 5124 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 4579 வழக்குகள் தீா்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

மொத்த தீா்வுத் தொகை ரூ. 11 கோடியே 64 லட்சத்து 89 ஆயிரத்து 468 ஆகும் . இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். பீரித்தா செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT