தூத்துக்குடி

உடன்குடி பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு முகாம்

14th Aug 2022 06:04 AM

ADVERTISEMENT

 

பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், உடன்குடி தேரியூா் ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரா் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தலைமை வகித்து, போதைப்பொருள்களின் தீமைகள், அவற்றைத் தவிா்க்கும் முறை, ஒழுக்கத்துடன் வாழ்தல் குறித்துப் பேசினாா். தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன், சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி, ஆற்றுப்படுத்துநா் பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் முத்துராமலிங்கம், ஐயப்பவேல், திரளான மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT