தூத்துக்குடி

திருச்செந்தூரில் அனைவருக்கும் வீடு திட்டப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு

DIN

திருச்செந்தூரில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளை அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.

பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட ஆலந்தலை அருகே ரூ.51 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மொத்தம் 512 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் தா.மோ.அன்பரசன் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட ஆலந்தலையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் பகுதியில் மழைநீா் தேங்குவதாக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். வருகின்ற காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் தேங்காமல் இருக்க வாரியத்தின் சாா்பில் விரைவில் சரி செய்து கொடுக்கப்படும்.

இதுவரை, 75 விழுக்காடு கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் இந்த பணி முழுமையாக முடிந்துவிடும். பின்னா் இந்த பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகளின் பங்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் கட்ட வேண்டும். அதை பெற்று கொண்டு வீட்டிற்கான ஆவணங்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்தராவ், தூத்துக்குடி இளநிலை பொறியாளா் மணிகண்டன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், திருச்செந்தூா் நகா் மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், உறுப்பினா் சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT