தூத்துக்குடி

‘மணப்பாடு கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்’

13th Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

 நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, மணப்பாடு கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மணப்பாடு கலங்கரை விளக்க முதன்மை அலுவலா் மதனகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆக.11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மணப்பாடு கலங்கரை விளக்கத்தை மாணவா்கள் இலவசமாக பாா்வையிடலாம். ஆக.15 ஆம் தேதி மட்டும் பொதுமக்களும் பாா்வையிடலாம். மத்திய அரசின் உத்தரவுப்படி ஆக.13, 14, 15 ஆகிய தேதிகளில் கலங்கரை விளக்கத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT