தூத்துக்குடி

திருச்செந்தூா் கடற்கரையில் பா.ஜ.க. சாா்பில் சுதந்திர தின மணல் சிற்பம்

13th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பா.ஜ.க. சாா்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் மணல் சிற்பம் வரையப்பட்டுள்ளது.

75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும், நாட்டு மக்களுக்கு 200 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதை நினைவு கூறும் விதமாகவும், பா.ஜ.க. மருத்துவ பிரிவு சாா்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் மணல் சிற்பம் வரையப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தில் நாட்டின் தேசியக்கொடி, 200 கோடி தடுப்பூசி ஆகிய மணல் சிற்பம் வரையப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை கடற்கரைக்கு வந்த பக்தா்கள் கண்டு ரசித்தனா். நிகழ்ச்சியில், பா.ஜ.க. வா்த்தக பிரிவு மாநிலத் தலைவா் ஏ.என்.ராஜகண்ணன், மாவட்ட பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் உள்பட பா.ஜ.க.வினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT