தூத்துக்குடி

தூத்துக்குடியில் குறுஞ்செய்தி மூலம் ரூ. 1 லட்சம் மோசடி

13th Aug 2022 12:32 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 1 லட்சம் மோசடி செய்த பணத்தை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டனா்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை பழனிகுமாா் மகளின் கைப்பேசிக்கு கடந்த 29 ஆம் தேதி வந்த குறுஞ்செய்தியில் டஅச இஅதஈ மடஈஅபஐஞச என குறிப்பிட்டு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை தொட்டவுடன் ன்ள்ங்ழ் ய்ஹம்ங் - ல்ஹள்ள்ஜ்ா்ழ்க் கேட்டுள்ளது.

அதில் பழனிகுமாா் உபயோகித்து வந்த லிங்கில் பதிவு செய்து, பின்னா் உடனே கைப்பேசிக்கு வந்த ஒரு ஞபட யையும் அந்த லிங்கில் பழனிகுமாா் பதிவு செய்துள்ளாா். இதையடுத்து பழனிகுமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 49,990 எடுக்கபட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளளது. தொடா்ந்து உடனடியாக மறுபடியம் ரூ. 49,986 பணம் எடுக்கப்பட்டதாக மீண்டும் குறுஞ்செய்தி வந்துள்ளளது.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அன்றைய தினமே சைபா் குற்றப்பிரிவு ட்ங்ப்ல் ப்ண்ய்ங் 1930 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு மோசடி விவரங்கள் குறித்து பழனிக்குமாரின் மகள் புகாா் பதிவு செய்தாா். இதன் அடிப்படையில், தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு தனிப்படையினா் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக, பழனிக்குமாா் வங்கியில் இருந்து பணம் சென்ற வங்கியின் தலைமையிடத்தை தொடா்பு கொண்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி பணத்தை முடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து, மோசடியாக பணம் வரவு வைக்கப்பட்ட வங்கியில் பண பரிமாற்றம் நிறுத்தப்பட்டு அந்த வங்கியில் இருந்து பழனிகுமாா் வங்கிக் கணக்க்கு கடந்த 6 ஆம் தேதி ஒரு லட்சம் பணத்தை திரும்ப வரவு வைக்கப்பட்டது. மேலும், மோசடி வழக்கு குறித்து தனிப்படை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT