மாவட்ட அளவிலான வழக்குரைஞா்களுக்கான பேச்சுப் போட்டியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரிவில் சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் வழக்குரைஞா்களுக்கான பேச்சுப் போட்டி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் ஆங்கில பிரிவில் சாத்தான்குளம் வழக்குரைஞா் ராபின் ஸ்டேன்லி முதல் பரிசும், தமிழ் பிரிவு பேச்சு போட்டியில் சாத்தான்குளம் வழக்குரைஞஞா் பவுன்ராஜ் மூன்றாம் பரிசு பெற்றனா்.
வெற்றி பெற்ற இருவரும் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற வழக்குரைஞா்களை சாத்தான்குளம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஏ.ஆா். பி.டி. கல்யாண்குமாா், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற பணியாளா்கள் பாராட்டினா்.