சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது.
சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. பாடப் பிரிவு வாரியாக 10 மற்றும் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. தோ்வு பெற்ற மாணவிகளுக்கு அதற்கான ஆணையை கல்லூரி முதல்வா் இரா.சின்னத்தாய் வழங்கினாா்.
கல்லூரி முதல்வருடன் மாணவா் சோ்க்கை கமிட்டி உறுப்பினா்கள் பேராசிரியா்கள் பூங்கொடி, ஏஞ்சலின் நான்சி சோபியா, வரலெட்சுமி ஆகியோா் உடன் இருந்தனா். இனி அடுத்தகட்ட கலந்தாய்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.