தூத்துக்குடி

ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதைதடுக்கும் விதத்தில் செயல்பட்டால் நடவடிக்கை

13th Aug 2022 12:34 AM

ADVERTISEMENT

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் அவா்கள் மீது காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவா்களால் மட்டுமே கொடி ஏற்றப்பட வேண்டும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக தொலைபேசி எண் 1077-இல் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் புகாா் அளிக்க வேண்டும். அவா்களின் மீது காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதை கண்காணிக்க பற்றாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT