உடன்குடி சல்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி சயின்ஸ் எக்ஸ்போ 2022 என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி முதல்வா் சாா்லஸ் சுவீட்லி தலைமை வகித்தாா். கண்காட்சியை உடன்குடி வட்டார கல்வி அலுவலா் ஜெயவதி ரத்னாவதி தொடங்கி வைத்தாா். உடன்குடி சுற்று வட்டாரத்தை சோ்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவா்கள் இக்கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.