தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு நிலம் கையகப் பணி நிறைவு இஸ்ரோ தலைவா் சோம்நாத்

12th Aug 2022 01:33 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவுபெற்றது என்றாா் இஸ்ரோ தலைவா் சோம்நாத்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்துச் சூழல்களும் உள்ளதால் இதற்கென 2,233 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரோ சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின், தமிழக அரசு சாா்பில் இதற்கென சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இப்பணிகள் குறித்து குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ தலைவா் சோம்நாத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குலசேகரன்பட்டினம் கூடல்நகா் பகுதிகளை பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க இப்பகுதி சிறந்தது. ஆய்வின் போது முழுமையான திருப்தி ஏற்பட்டது. பாதுகாப்பு - அரசின் அனுமதிக்காக மத்திய அரசிடம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT