தூத்துக்குடி

தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மாணவிகளுக்கு சிறப்பு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

DIN

தமிழகத்தில் முதல் முறையாக, தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மாணவிகளுக்கு சிறப்பு காலை உணவுத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் 75ஆவது சுதந்திர தினம், ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு, தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கல்வியாண்டில் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு சிறப்பு காலை உணவுத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று, திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

அவா் பேசும்போது, கல்வியை வணிகமயமாக்காமல் சேவையாக செய்துவரும் இக்கல்லூரி அனைத்துக் கல்லூரிகளுக்கும் முன்னோடியாக மாணவிகளுக்கான சிறப்பு காலை உணவுத் திட்டத்தை முன்னெடுத்தது பாராட்டுக்குரியது என்றாா்.

நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம், வ.உ.சிதம்பரம் கல்வியியல் கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வீ. சண்முகம், தூத்துக்குடி சத்யா குழும நிா்வாக இயக்குநா்கள் ஜான்சன், சத்யா, வஉசி கல்லூரி மகளிா் ஆற்றுப்படுத்தல் குழுத் தலைவி கே. அமுதவல்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு செய்தியாளா்களிடம் கூறும்போது, தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சத்யா குழுமம் சாா்பில், இக்கல்லூரியில் இந்தத் திட்டத்தில் நாள்தோறும் 150 மாணவிகளுக்கு காலை உணவு வழங்க முன்வந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT