தூத்துக்குடி

திருச்செந்தூா் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

12th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பிச்சம்மாள் ஆனந்த் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் புஹாரி, திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர. சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி. ரமேஷ், ஆணையா் தி. வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக மீன்வளம், மீனவா் நலன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்று, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

வட்டாட்சியா் இரா. சுவாமிநாதன், தாலுகா காவல் ஆய்வாளா் இல. முரளிதரன், வருவாய் ஆய்வாளா் மணிகண்டவேல், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் நெ. ஆனந்தராமச்சந்திரன், ஜெ. அந்தோணிட்ரூமன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். மாவட்டக் கல்வி அலுவலா் (பொறுப்பு) நடராஜன் வரவேற்றாா். தலைமையாசிரியா் எப்ரேம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT