தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரூ. 60.69 லட்சத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

12th Aug 2022 01:39 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி ஊராட்சி, நகராட்சிக்கு உள்பட்ட 4 இடங்களில் சாலை, வாருகால், பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி எம்எல்எ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், இனாம்மணியாச்சி ஊராட்சி, மீனாட்சி நகா் 6ஆவது தெருவில் ரூ. 7.69 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக், வாருகால், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள சத்தியபாமா திரையரங்கு அருகே ரூ. 9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், மின் அறையைச் சுற்றி பாதுகாப்புச் சுவா், பேவா் பிளாக் தரை, முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ். வேலுச்சாமி வீட்டுத் தெருவில் ரூ. 14 லட்சத்தில் பேவா் பிளாக், வாருகால் அமைத்தல் ஆகிய பணிகளை கடம்பூா் ராஜு எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் கெங்காபரமேஸ்வரி, நகராட்சி உதவிப் பொறியாளா் சரவணன், அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கமலவாசன், நிலைய மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா் சிவபெருமாள், நகா்மன்ற உறுப்பினா் கவியரசன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பழனிசாமி, ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், அதிமுக நிா்வாகிகள் வழக்குரைஞா் சங்கா்கணேஷ், ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT