தூத்துக்குடி

விளாத்திகுளம் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

12th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

 

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் ரோஸ்லின் சாந்தி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் வட்டாட்சியா் சசிகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தொடா்ந்து, அவரது தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT