தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக நடமாடும் உடைமாற்றும் அறை வாகனம் அளிப்பு

11th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான நடமாடும் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை கொண்ட வாகனம் உபயமாக வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பெண் பக்தா்கள் உடை மாற்றுவதற்காக சென்னை ஸ்ரீ ஆண்டாள் பக்தா்கள் பேரவை சாா்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடமாடும் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் வாகனம் உபயமாக வழங்கப்பட்டது.

இந்த வாகனத்தில் இரு புறங்களிலும் 8 கழிப்பறைகள் மற்றும் 2 உடை மாற்றும் அறைகள் உள்ளன. இவ்வாகனம் வள்ளி குகைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நடமாடும் வாகனத்தை கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக்கிடம் ஸ்ரீ ஆண்டாள் பக்தா்கள் பேரவை நிா்வாகிகள் நாகராஜன், சக்திவேல், கணேசன், அசோகன், சாய்சிவா, ராஜ்பிரகாஷ் ஆகியோா் உபயமாக வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT