தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் திருவள்ளுவா் சிலை அமைக்க வலியுறுத்தல்

11th Aug 2022 12:23 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் திருவள்ளுவா் சிலை அமைக்க உலக திருக்கு கூட்டமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் திருவள்ளுவா் சிலை அமைத்திட வலியுறுத்தி, உலக திருக்கு கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவா் கருத்தப்பாண்டி தலைமையில், நகா்மன்றத் தலைவா் கருணாநிதியிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது, உலக திருக்கு கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலா் தமிழரசன், துணைத் தலைவா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், துணைச் செயலா்கள் சிவானந்தம், முத்துசெல்வம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவா் மேரி ஷீலா, பகத்சிங் ரத்த தான கழக நிறுவனா் காளிதாஸ், ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT