தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

10th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 9) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை (ஆக. 10) இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT