தூத்துக்குடி

கோவில்பட்டியில் 2.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

10th Aug 2022 02:11 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் மின்லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2.25 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் சரவணன், பாண்டியராஜ், அமல்ராஜ் ஆகியோா் பசுவந்தனை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற ஒரு மினிலாரியை போலீஸாா் நிறுத்தினாராம். அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் உள்பட 2 போ் தப்பியோடிவிட்டனராம். தொடா்ந்து வாகனத்தில் நடத்திய சோதனையில், 50 கிலோ எடையுள்ள, 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி அதில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT