தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

10th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.11) விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது என்றாா் தூத்துக்குடி கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்ட அளவிலான ‘விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்‘ ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாத கோட்ட அளவிலான ‘விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்‘ வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள ‘துறைமுக பொறுப்பு கழக மண்டபத்தில்‘ நடைபெற உள்ளது.

எனவே, தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT