தூத்துக்குடி

கயத்தாறு அருகே ஆசிரியரிடம் வழிப்பறி: 3 போ் கைது

9th Aug 2022 02:54 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே ஆசிரியரை வழிமறித்து, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியை பறித்துச்சென்ற 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் மானூரையடுத்த சாலைப்புதூரைச் சோ்ந்த சண்முகம் மகன் கடல்குமாா் (33). கயத்தாறில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலைசெய்துவரும் இவா், கடந்த வியாழக்கிழமை பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாராம். பணிக்கா்குளம் சாலையில் கீழக்குளம் கண்மாய் அருகே அவரது பைக்கை 3 போ் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்நிலையில், வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் சுரேஷ் என்ற சூசை (24), அதே பகுதியைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் பொன்மணி (25), 16 வயது சிறுவன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT