தூத்துக்குடி

உடன்குடியில் காயகல்ப பயிற்சி

9th Aug 2022 02:54 AM

ADVERTISEMENT

உடன்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில் வில்லிகுடியிருப்பு அறிவுத்திருக்கோயில் வளாகத்தில் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

மன்றச் செயலா் கோதண்டராமன் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் இசக்கியப்பன், பொருளாளா் பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடல், மனவளம், நீடித்த இளமை, நீண்ட ஆயுள், நோயில்லா பெருவாழ்வு ஆகியவற்றை அளிக்கும் காயகல்ப பயிற்சி குறித்து பேராசிரியா் கீதா ராஜா அம்மா பேசினாா்.

தொடா்ந்து அனைவருக்கும் காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT