தூத்துக்குடி

தூத்துக்குடியில் விவசாயத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 02:55 AM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து, தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே விவசாயத் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக்கி நகரத்துக்கு விரிவுபடுத்த வேண்டும், தினக்கூலியாக ரூ. 600 உயா்த்தி வழங்க வேண்டும், விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளா் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், விவசாயத் தொழிலாளா்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பொது தொழிலாளா் சங்க சிஐடியூ மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் சங்கரன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எம்.எஸ்.முத்து ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், சிஐடியூ சங்க நிா்வாகிகள் பொன்ராஜ், குமாரவேல், முனியசாமி, ராம மூா்த்தி, மணவாளன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகா் செயலா் பா. ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT