தூத்துக்குடி

கருணாநிதி நினைவு நாள்: தூத்துக்குடியில் திமுகவினா் மௌன ஊா்வலம்

8th Aug 2022 12:19 AM

ADVERTISEMENT

 

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மௌன ஊா்வலம் நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமையில் புறப்பட்ட ஊா்வலம் கலைஞா் அரங்கம் முன் நிறைவடைந்தது. அங்குள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சா் கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்தும் மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணை மேயா் ஜெனிட்டா, பகுதிச் செயலா்கள் சுரேஷ்குமாா், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தூத்துக்குடி கீதா ஹோட்டல் முன் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு மேயா் ஜெகன் பெரியசாமி மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி சாா்பில் நடைபெற்ற கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட 100 பேருக்கு பல்வேறு நல உதவிகளை பகுதிச் செயலா் எஸ். சுரேஷ்குமாா் வழங்கினாா்.

கோவில்பட்டி நகர திமுக சாா்பில் நகரச் செயலரும் நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமையில் கருணாநிதியின் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், திமுக ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், திரளானோா் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் முதலூா், தா்மாபுரி, மணிநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றியச் செயலரும் முதலூா் ஊராட்சித் தலைவருமான பொன்முருகேசன் தலைமையிலும், தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் போலையா்புரத்தில் ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமையிலும், சாத்தான்குளத்தில் வடக்கு ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப், நகரச் செயலா் மகாஇளங்கோ ஆகியோா் தலைமையிலும், நாசரேத்தில் 4 இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT