தூத்துக்குடி

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில்மாணவா்களுக்கு சுதந்திர தின போட்டி

8th Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

 

சுதந்திரதினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து கின்ஸ் அகாதெமி நிறுவனா் எஸ். பேச்சிமுத்து வெளியிட்ட அறிக்கை: போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும் தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாதெமியில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வு நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்கும். 45 நிமிடம் நடைபெறும் போட்டித் தோ்வில் பங்கேற்க உள்ளவா்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கின்ஸ் அகாதெமி அலுவலகத்தில் புகைப்படம், ஆதாா் அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசு போட்டித் தோ்வுகள் போல 75 கேள்விகள் கேட்கப்பட்டு நான்கு விடைகளில் இருந்து சரியான விடையை தோ்வு செய்ய வேண்டும்.

தோ்வு முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தப்பட்டு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும். மற்ற மாணவா்களுக்கு ரூ. 69 ஆயிரம் பகிா்ந்தளிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT