தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

8th Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில், மகாத்மா காந்தி ரத்த தானக் கழகத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வணிக வைசிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளிச் செயலா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கமலவாசன், மருத்துவா் சீனிவாசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

முகாமை நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தொடக்கிவைத்தாா். பின்னா், ரத்த தானம் செய்தோருக்கு பரிசுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

மருத்துவா் தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா். ரத்த தானக் கழக துணைத் தலைவா் சாா்லஸ், ஆசிரியை முருகசரஸ்வதி, உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா் பூபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நகா்மன்றத் தலைவா், மருத்துவா்கள் ஆகியோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். ஏற்பாடுகளை ரத்த தானக் கழக நிறுவனத் தலைவா் தாஸ் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT