தூத்துக்குடி

கோவில்பட்டியில் கருணாநிதி நினைவு நாள்

8th Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, கோவில்பட்டி நகர திமுக சாா்பில் நகரச் செயலரும் நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமையில் மு.கருணாநிதியின் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், திமுக ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், திரளானோா் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

எட்டயபுரம் சாலையில் மொழிப்போா் தியாகி பா. முத்து தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினா் பா.மு. பாண்டியன், ஒன்றிய துணைச் செயலா் தங்கப்பாண்டியன் உள்பட ஏராளமானோா் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, 100 ஏழை, எளியோருக்கு அரிசிப் பைகள் வழங்கப்பட்டன.

நகா்மன்ற உறுப்பினா்கள் ராமா், கனகராஜ், தவமணி, திமுக பொறியாளரணி துணை அமைப்பாளா்கள் ரமேஷ், செ. பீட்டா், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் செல்வமணிகண்டன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் சோழபெருமாள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சந்தானம், விவசாயத் தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், வா்த்தக அணி அமைப்பாளா் ராஜகுரு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT